'கரூர்' ஜவுளியைத் தொடர்ந்து... 'தூத்துக்குடி' உப்பிலும் கைவைத்த கொரோனா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருவதால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக இந்திய ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நிலைமை சரியாகும் வரை பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கேட்டுக் கொண்டதால் கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கோடி ஜவுளிப் பொருட்கள் தேங்கியுள்ளதாக வியாபாரிகள் சமீபத்தில் வேதனை தெரிவித்து இருந்தனர்.

'கரூர்' ஜவுளியைத் தொடர்ந்து... 'தூத்துக்குடி' உப்பிலும் கைவைத்த கொரோனா!

இந்த நிலையில் தூத்துக்குடி உப்பு தொழிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. துறைமுகத்தில் மட்டும் 40 சதவீத ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு சரக்குகளை இறக்குவதற்காகவும், ஏற்றி செல்வதற்காகவும் வழக்கமாக வரக்கூடிய லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

உப்பு உற்பத்தியில் இந்தியாவை பொறுத்தவரை குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்தபடியாகவும், தமிழகத்தை பொறுத்தவரை முதலிடத்திலும் தூத்துக்குடி இருந்து வருகிறது. உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கொரோனா காரணமாக கடந்த 5 நாட்களாக லாரியில் உப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான உப்பு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.