'உச்சத்தில்' இருந்து கட்டுக்குள் வந்த கொரோனா... எந்தெந்த மாவட்டங்கள்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக மாவட்டங்களில் உச்சத்தில் இருந்த தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விரைவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

'உச்சத்தில்' இருந்து கட்டுக்குள் வந்த கொரோனா... எந்தெந்த மாவட்டங்கள்னு பாருங்க!

குறிப்பாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா வேகமாக கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,953 ஆக உள்ளது. மதுரையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 639 ஆக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக நூறுக்கும் குறைவாக எண்ணிக்கை காணப்படுகிறது.

திருச்சியிலும் மாத தொடக்கத்தில் 359 ஆக இருந்த புதிய பாதிப்பு, தற்போது 50க்கும் கீழ் குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் ஒன்றில் 607 ஆக இருந்த புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது நூறை ஒட்டியே உள்ளது. கொரோனாவை எவ்வாறு கையாள்வது என தற்போது தெரிந்து கொண்டதால், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்