‘சென்னையில்’ ஒரே நாளில் 500-க்கும் மேல் பாதிப்பு... மோசமான நிலைமை... ‘முந்திக்கொண்டு’ முன்னேறிய ‘தமிழகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில், டெல்லியை பின்னுக்கு தள்ளி தமிழகம் முன்னேறியுள்ளது.

‘சென்னையில்’ ஒரே நாளில் 500-க்கும் மேல் பாதிப்பு... மோசமான நிலைமை... ‘முந்திக்கொண்டு’ முன்னேறிய ‘தமிழகம்’!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டில் 43-ம், பிற மாவட்டங்களில் புதிதாக தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதைடுத்து நாட்டில் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் வரிசையில் டெல்லியை பின்னுக்குதள்ளி 3-வது இடத்திற்கு வந்தது தமிழகம்.

4-ம் இடத்தில் இருந்த  தமிழகம், ஒரே நாளில் உயர்ந்த பாதிப்பால் ஒருபடி மேலே போய் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்திலும், குஜராத் 2-ம் இடத்திலும் உள்ளன. இதற்கிடையில் தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய 1,867 பேருக்கு இதுவரை கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்தவர்கள் 26 மாவட்டங்களில் இருப்பது இதுவரை தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.