சலூன் கடை 'ஓனருக்கு' கொரோனா... எப்படி வந்தது? யார் மூலம் பரவியது?... கடைக்கு வந்தவர்களை 'கண்காணிக்கும்' அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சலூன் கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் வெளிமாநிலம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சலூன் கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவரது கடை மற்றும் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் கடையை மூடுமாறு 2 நாட்களுக்கு முன்பே அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு எப்படி? யார் மூலம் பரவியது? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்