'சென்னை'யில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'ஆண்களுக்கு' பாதிப்பு... குறிப்பா 'இந்த' வயசுக்காரங்கள தான் அதிகம் தாக்குதாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

'சென்னை'யில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'ஆண்களுக்கு' பாதிப்பு... குறிப்பா 'இந்த' வயசுக்காரங்கள தான் அதிகம் தாக்குதாம்!

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக சென்னை திகழ்கிறது. குறிப்பாக ராயபுரம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மக்கள் நெருக்கடி காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் கொரோனா குறித்த புள்ளிவிவர அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 59.98 சதவீதம் ஆண்களும், 40.01 சதவீதம் பெண்களும் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 0.01 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வயது வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகுகின்றனர்.

இதில் 30 முதல் 39 வயது வரை உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 20 முதல் 29 வயதினரும், 40 முதல் 49 வயதினர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் ராயபுரம் மண்டலம், குணம் அடைவோர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற செய்திகள்