ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்... 70% பேர் இருப்பது 'இங்கு' தான்... மண்டல வாரியான நிலவரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மண்டல வாரியாக வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் தலைநகரான சென்னையில் மட்டும் 25,937 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது ஒட்டுமொத்த தமிழக பாதிப்பில் 70.4% ஆகும்.
குறிப்பாக வடசென்னை பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் நிலைமை வெகுவாக மோசமாகி வருகிறது. சென்னையை பொறுத்தவரை ஆண்கள் 60.15 சதவிகிதத்தினரும், பெண்கள் 39.84 சதவிகிதத்தினரும், திருநங்கைகள் 0.01 சதவிகிதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தற்போது 360 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் சென்னை மாநகராட்சி, இந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வரக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
மண்டல வாரியாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கீழே காணலாம்.
1. ராயபுரம் - 4405
2. தண்டையார்பேட்டை - 3405
3. தேனாம்பேட்டை - 3069
4. கோடம்பாக்கம் - 2805
5. திரு.வி.க.நகர் - 2456
6. அண்ணா நகர் - 2362
7. அடையாறு - 1481
8. வளசரவாக்கம் - 1170
9. திருவொற்றியூர் - 972
10. அம்பத்தூர் - 901
11. மாதவரம் - 724
12. ஆலந்தூர் - 521
13. பெருங்குடி - 481
14. சோழிங்கநல்லூர் - 469
15. மணலி - 383
மற்ற செய்திகள்