'தமிழகத்தில்' கொரோனாவுக்கு 'பலியானோர்' எண்ணிக்கை 8-ஆக உயர்வு! சென்னையில் மட்டும் 149 பேருக்கு கொரோனா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 621-ஆக இருந்த நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கும் கொரோனா தொற்று இருந்துள்ளது. இதேபோல் வேலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் உயிரிழந்தார்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். இந்த 69 பேரில் சென்னையில் மட்டும் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது.