'ஈரோட்டில்' வீடுகளில் முடக்கப்பட்ட '694 பேர்'... கைகளில் 'முத்திரை' குத்தப்பட்டிருக்கும் இவர்களை... வெளியில் 'பார்த்தால்' அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோட்டில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் தொடர்பில் இருந்த 694 பேர் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளில் முத்திரை குத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

'ஈரோட்டில்' வீடுகளில் முடக்கப்பட்ட '694 பேர்'... கைகளில் 'முத்திரை' குத்தப்பட்டிருக்கும் இவர்களை... வெளியில் 'பார்த்தால்' அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல்...

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் 15 பேர் கொரோனா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கோபியைச் சேர்ந்த சிலர் என 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து பெருந்துறை மருத்தவமனை சிறப்பு மருத்தவமனையாக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் நேற்று 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன.

சிகிச்சை பெற்று வரும் 15 பேருடன் தொடர்பில் இருந்த கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த சுமார் 169 வீடுகளில் வசித்து வரும் 694 பேர் வீடுகளிலேயே முடக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களது கைகளில் முத்திரை குத்தப்பட்டுள்ளது. இவர்கள் வெளியே வந்தால், பொதுமக்கள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனைக்குள் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

CORONA, ERODE, PERUNDURAI