தமிழகத்தில் இந்த ‘ஒரு’ மாவட்டத்துல மட்டும்தான் இதுவரை யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் லாரி டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்த ‘ஒரு’ மாவட்டத்துல மட்டும்தான் இதுவரை யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை..!

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள எலவடை கிராமத்தை சேர்ந்த 35 வயது லாரி டிரைவர் ஓசூரில் இருந்து மதுரை, சங்ககிரி ஆகிய பகுதிகளுக்கு காய்கறி லாரியை ஓட்டி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்ககிரியில் இருந்து வந்த இவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. முதற்கட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரூர் உதவி கலெக்டர் பிரதாப், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜெமினி உள்ளிட்டோர் நேற்று மொரப்பூர் பகுதிக்கு நேரில் சென்று அந்த லாரி டிரைவர் குறித்த விசாரணை நடத்தினர். இதனை அடுத்து நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு லாரி டிரைவர் அழைத்து வரப்பட்டார்.

அங்கு கொரோனா தொற்று தொடர்பான மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன என்றும், அதன்பின்னரே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் வெளியாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்தான் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தருமபுரி லாரி டிரைவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே இதுவரை கொரோனா பாதிக்காத மாவட்டமாக உள்ளது.