கொரோனா 'பாசிட்டிவ்' ... ஆனால் 'மருத்துவமனையில்' இருந்து எஸ்கேப்? ... தேடுதல் வேட்டையில் 'போலீசார்' ... அச்சத்தில் 'மக்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கிட்டத்தட்ட இருபது பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லியை சேர்ந்த 30 வயதான நபர் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகியுள்ளார். அவரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா 'பாசிட்டிவ்' ... ஆனால் 'மருத்துவமனையில்' இருந்து எஸ்கேப்? ... தேடுதல் வேட்டையில் 'போலீசார்' ... அச்சத்தில் 'மக்கள்'!

கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி, விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவாகியுள்ள நபரால் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லியை சேர்ந்த நபர் புதுச்சேரி தப்பித்து சென்றிருக்கலாம் என்ற தகவலின் அடிபப்டையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அவரை பற்றி தகவல் தெரியும் நபர்கள் 04146 223265 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.