"அம்மாடா கண்ணா!".. 'கொரோனா' தொற்றுள்ள 'பெண்ணுக்கு' பிறந்த 'குழந்தை'!.. 'வீடியோ காலில் பேசிய தாய்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் சிவில் மருத்துவமனையில் ஏப்ரல் 18-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்ட தாய்க்கு குழந்தைக்கு பிறந்தது.

"அம்மாடா கண்ணா!".. 'கொரோனா' தொற்றுள்ள 'பெண்ணுக்கு' பிறந்த 'குழந்தை'!.. 'வீடியோ காலில் பேசிய தாய்!'

ஆனால் குழந்தையின் தாய்க்கு கொரோனா இருந்ததால், குழந்தைக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையை பரிசோதித்ததில், குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், தாய்க்கு கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த தாய் தனது குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார். இது பற்றி பேசிய மருத்துவமனை நிர்வாகம், தாயிடம் இருந்து கொரோனா குழந்தைக்கு பரவிவிடக் கூடாது என்பதற்காக தாயும், பிறந்த குழந்தையும் தனி, தனி வார்டில் வைத்துள்ளதாகவும், அதனால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.