கொரோனா: ‘அன்றாட தொழிலாளர்களுக்காக’.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செய்த ‘நெகிழ வைக்கும்’ செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா உட்பட உலக நாடுகளை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய். இந்தியாவைப் பொருத்தவரை 270 பேருக்கு கிட்டத்தட்ட கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் இந்தியாவில் கொரோனாவுக்காக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனா: ‘அன்றாட தொழிலாளர்களுக்காக’.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செய்த ‘நெகிழ வைக்கும்’ செயல்!

தவிர மார்ச் 22ஆம் தேதி (ஞாயிறு) ஜனதா ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக அனைத்து வணிக நோக்கிலான கடைகளும், பொதுப் போக்குவரத்து அம்சங்களான ரயில்கள் மற்றும் பேருந்துகளும் நாளை இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அன்றாட  விநியோகத்தினால் மட்டுமே வருமானத்தைப் பெறும் சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் (unorganized sector labourers) வருமானம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இவர்களின் நலனுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.

இதன் நிமித்தமாக தமிழக அரசை அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து தனது ஒரு மாத ஊதியம் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அளித்ததோடு, ஒருவனா பாதிப்புக்குள்ளாகும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊதியம் பெறுபவர்கள் செய்ய உதவி செய்ய வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MADRASHIGHCOURT, JUSITICE