'அடுத்த மாசம்' தான் அண்ணனோட 'ஆட்டமே இருக்கு...' "இனி லட்சத்துல பாப்பீங்க..." 'அதிர்ச்சிமேல்' அதிர்ச்சியளிக்கும் 'ஆய்வுத் தகவல்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக அதிகரிக்கும் என்றும், சென்னையில் கொரோனா தொற்று அக்டோபரில் உச்சநிலையை அடையும் என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

'அடுத்த மாசம்' தான் அண்ணனோட 'ஆட்டமே இருக்கு...' "இனி லட்சத்துல பாப்பீங்க..." 'அதிர்ச்சிமேல்' அதிர்ச்சியளிக்கும் 'ஆய்வுத் தகவல்...'

சென்னை மற்றும் தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும்?, எத்தனை பேருக்கு தொற்று பரவும்? எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும்? போன்றவை குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதில், சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு, கொரோனா உச்ச நிலையை அடையும் வேகத்தை 2 அல்லது 3 வாரங்களுக்கு வேண்டுமானால் குறைக்கலாம். ஆனால், அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் உச்சநிலையை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மேலும் வரும் ஜூலை மாதம் மத்தியில் தமிழகத்தில் 2.70 லட்சம் மக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும், இதில் 60 சதவீத தொற்று சென்னையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் மாத இறுதியில் சென்னையில் மட்டும் 71 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருக்கும் என்றும், இந்த எண்ணிக்கை ஜூலை 15-ந் தேதியளவில் 1.5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பற்றிய ஆய்வின் கணிப்பின்படி, ஜூலை 15-ந் தேதி சென்னையில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 244 ஆகவும், தமிழகத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 281 ஆகவும் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பும் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாத மத்தியில் சென்னையில் 1,654 இறப்புகளும், தமிழகம் முழுவதும் இறப்பு எண்ணிக்கை 3,072 ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று உச்ச நிலையை அடைந்ததும் சில வாரங்களில் படிப்படியாக இறங்கத் தொடங்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்