'ஒரே ஊருல 18 பேருக்கு கொரோனா...' 'குடும்பத்தோட தாயம் விளையாடிருக்காங்க...' 'கோயம்பேடு காண்டாக்ட் ஹிஸ்டரியில இருந்தவர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காண்டாக்ட்டில் இருந்தவர் தாயம் விளையாடியதால் மற்றவர்களுக்கும் பரவிய கொரோனா வைரஸ். ஒரே கிராமத்தில் 18 பேருக்கு உறுதியானது அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டின் காண்டாக்ட் ஹிஸ்டிரியிலில் சிக்கியவர் தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர். சந்தேகத்தின் பெயரில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட இவருக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இவருடன் தொடர்பில் இருந்த அந்த கிராமத்தை சேர்ந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் நேற்று முன்தினம் இவருடன் தொடர்பில் இருந்த 7 நபர்களுக்குக் கொரோனா உறுதியானது. நேற்று 5 நபர்களுக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் சேர்ந்து தாயம் விளையாடி உள்ளனர். மேலும் கொரோனா பாதித்த லாரி டிரைவர் குடும்பத்தினர், அருகே உள்ள குடும்பத்தினருடன் தாயம் விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதுவரை பாதித்த 12 பேர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடைப்பட்டி கிராமத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து மிக தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், தேவையில்லாமல் வெளியே சுற்றுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 7 நபர்கள் மீது அந்தந்த காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினர் சுகாதாரத்துறைப் பணியாளர்கள்.
இது போல் வெளியே பயணம் செய்தவர்கள் சிறிது காலம் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும், அப்படி செய்திருந்தால் இதுபோன்று பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்காது என்பதும் நிதர்சனமான உண்மை. கொரோனோவை கட்டுப்படுத்த தனித்திருத்தல் மட்டுமே நம் கையில் இருக்கும் ஒரே கருவியாகும்