‘கொரோனா பயத்தால்’... ‘தயங்கி நின்ற சுகாதார ஊழியர்கள்’... ‘துணிச்சலாக களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. ரோஜா’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சத்தால் சுகாதார ஊழியர்கள் செய்ய தயங்க வேலையை, சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கையில் எடுத்து செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் நகரி தொகுதிக்குட்பட்ட வடமாலை பகுதியில் புதிதாக ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்க நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சத்தால் சுகாதார ஊழிர்கள் வீட்டுக்கு வெளியே கிருமி நாசினி தெளிக்க செல்லாமல் தயங்கி நின்றனர்.
இதனை கவனித்த அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா பாதுகாப்பு கவச உடைகளை ஊழியர்களுக்கு அணிவித்தார். பின்னர் தானும் அணிந்து கொண்டு வீடு வீடாகச் சென்று கிருமி நாசினி தெளித்தார். அவர் முன்னோடியாக செயல்பட்டு களத்தில் இறங்கியதை அடுத்து, அதன்பின் சுகாதார ஊழியர்களும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அவர், 'அனைவரும் பாதுகாப்பாக இந்த நேரத்தில் இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.