குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இதுவே காரணம்... ராணுவ குழு வெளியிட போகும் அறிக்கை
முகப்பு > செய்திகள் > தமிழகம்குன்னூர் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்த இறுதிகட்ட ஆய்வை இந்திய ராணுவ குழு நிறைவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு 08.12.2021 அன்று ராணுவ உயர் அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெற இருந்தது. இதில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி மற்றும் 4 பைலட்டுகள் உட்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் இருந்து 11:30 மணியளவில் ஹெலிகாப்டரில் கிளம்பினர்.
குன்னூர் மலைப்பாதையில் உள்ள காட்டேரி பள்ளத்தாக்கிற்கு மேலே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
குன்னூர் மலைப்பகுதியில் பயணம் செய்த காரணத்தினால் திடீரென்று மூடுபனி உருவாக வாய்ப்பு அதிகம். பெரும்பான்மையான ஹெலிகாப்டர் விபத்துகள் மலைப்பகுதிகளில் நடப்பது அதனால் தான். மூடுபனி வருகிறபோது, ஹெலிகாப்டர் எப்படி பயணிக்கிறது என்பதை அறிய முடியாமல் வெளியே கருப்பு நிறமாக மாறி எதையும் காண முடியாமல் போகும். அதுமட்டுமல்லாமல் மூடுபனியினால் ஹெலிகாப்டர் எந்த கோணத்தில் பறக்கிறது என்பதனை அறிய முடியாது. விமானம் என்றால் அதனை நேராக நிமிர்த்த முடியும். ஹெலிகாப்டரில் அதை தெரிந்துக்கொள்ள முடியாது.
நீலகிரி மாவட்டம் மின்சாரத் துறைக்கு சம்பவ இடத்தில் High Transmission Lines மற்றும் High Voltage Poles ஆகியவை உள்ளதா அது சேதமடைந்துள்ளதா என காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. சம்பவ தினத்தன்று சம்பவ இடத்தின் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது.
பலகட்டங்களில், பல கோணாங்களில் நடத்தப்பட்ட விசாரணையை இந்திய விமானப்படை குழு முடித்துள்ளது. இந்த விசாரணை அறிக்கை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிகிறது. விசாரணை அறிக்கை குறித்து வெளியான தகவல்களில் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாகவே விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்