ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவன்.. முழு விவரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு கிழக்கு தொகுதி  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் EVKS இளங்கோவன், கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவன்.. முழு விவரம்

கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா  தனது 46 வயதில் உயிரிழந்தார்.

இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன்  ஆவார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் யுவராஜாவை திருமகன் ஈவெரா  வென்றார்.

திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Congress Evks elangovan meet Mnm Kamal Haasan

காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில்   ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இளங்கோவன், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து தனக்கு ஆதரவளிக்கும் படி வேண்டு கோள் வைத்துள்ளார்.

Congress Evks elangovan meet Mnm Kamal Haasan

கமல் சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இளங்கோவன், "கமல்ஹாசன் எங்களுக்கு கை கொடுத்தது மட்டுமல்லாமல் காங்கிரசு கட்சியின் கை சின்னத்திற்கு இடைத்தேர்தலில் வாக்கும் சேகரிப்பார் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம். கமல்ஹாசனின்  தந்தையார் காங்கிரசு கட்சியில் இருந்தவர். காமராஜரோடு கமல் தந்தையாருக்கு நெருங்கிய நட்பு உண்டு".

இந்த சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு கேட்டு என்னை சந்தித்தனர். மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் அறிவிப்போம்" என கமல் கூறினார்.

மற்ற செய்திகள்