முதலிரவு அறைக்குள் கேட்ட பயங்கர சத்தம்.. பதைபதைத்த உறவினர்கள்.. மாப்பிள்ளை மீது புகார் கொடுத்த பெண் வீட்டார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதலிரவின் போது மணமகளை துன்புறுத்தியதாக புது மாப்பிள்ளை மீது பெண் வீட்டார் காவல்துறையில் புகார் கொடுத்திருப்பது நாகை மாவட்டத்தில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முதலிரவு அறைக்குள் கேட்ட பயங்கர சத்தம்.. பதைபதைத்த உறவினர்கள்.. மாப்பிள்ளை மீது புகார் கொடுத்த பெண் வீட்டார்..!

Also Read | "அப்பா என்ன கடத்திட்டாங்க.. 5 லட்சம் வேணுமாம்".. போனில் அழுத மகன்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!

திருமணம்

நாகை மாவட்டம் தொழுதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 27 ஆம் தேதி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் உள்ளூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதில் மணப் பெண்ணுக்கு 12 சவரன் நகை, கட்டில், மெத்தை மற்றும் பீரோ உள்ளிட்ட சீர்வரிசை சாமான்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து புதுமண தம்பதி மாப்பிளை ஊரான தொழுதூர் திரும்பியிருக்கிறார்கள்.

முதலிரவு

திருமணம் நடந்த அன்றே முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ராஜ்குமார் குடும்பத்தினர். இதனையடுத்து, சம்பிரதாய முறைப்படி மணப் பெண்ணை முதலிரவு அறைக்குள் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், கொஞ்ச நேரத்தில் முதலிரவு நடைபெற்ற அறையில் இருந்து சத்தம் வரவே, திகைத்துப்போன உறவினர்கள் உள்ளே சென்று பார்த்த போது மணப்பெண் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது.

Complaint lodged against groom for tortured bride in first night

இந்நிலையில், உடம்பில் பல காயங்களுடன் இருந்ததாக சொல்லப்படும் புதுமணப் பெண் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

புகார்

இந்நிலையில், முதலிரவில் மணப் பெண்ணை தாக்கி துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் மணமகன் ராஜ் குமார் மீது காவல்துறையில் புகார் அளிக்க முடிவெடுத்திருக்கிறார்கள் மணப் பெண்ணின் குடும்பத்தினர். இதனையடுத்து, நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பளார் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் நேரில் வந்த மணமகளின் தாயார் மாப்பிள்ளை மீது புகார் அளித்திருக்கிறார்.

தனது புகாரில், ராஜ் குமார் தனது மகளை தாக்கியதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மணப் பெண்ணின் தாயார் குறிப்பிட்டிருப்பிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் முதலிரவின் போது மண மகளை துன்புறுத்தியதாக மாப்பிள்ளை மீது திருமண பெண்ணின் தாயார் காவல்துறையில் புகார் அளித்திருப்பது அவ்வட்டார மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | குடும்ப கஷ்டத்தால் பஞ்சர் கடை நடத்தியவர்.. இன்று IAS.. கல்வியால் வறுமையை வீழ்த்திய வருண் பரண்வால்..!

GROOM, BRIDE, FIRST NIGHT, COMPLAINT, மாப்பிள்ளை, திருமணம்

மற்ற செய்திகள்