'நோயாளிகளால் நிரம்பி வழியும் 'அடையாறு புற்று நோய்' மருத்துவமனை'...இதுதான் காரணமா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடையாறில் உள்ள புற்று நோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வழக்கத்தை காட்டிலும் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை அடையாறில் உள்ள புற்று நோய் மருத்துவமனை மிகவும் பிரசித்திபெற்ற மருத்துவமனையாகும். இங்கு பல இடங்களில் இருந்தும் அதிகமான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்நிலையில் வழக்கத்தைவிட 25 சதவீதம் நோயாளிகளின் வருகை அதிகரித்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் சிகிச்சை அளிக்கும் பல தனியார் புற்று நோய் மருத்துவமனைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதுதான் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
அதேபோன்று மாதத்திற்கு 40 முதல் 50 லட்சம் வரை நன்கொடை வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக பலரும் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருவதால், தங்களுக்கு வர வேண்டிய நன்கொடை குறைந்து விட்டதாகவும் மருத்துவமனையின் தலைவர் சந்தா கூறியுள்ளார். மேலும் புற்று நோய் சிகிச்சையான கீமோதெரபிக்காக அண்டை மாநிலங்களை சேர்ந்த மக்கள் பலரும் வருவது வழக்கம். இதனால் மருந்துகளுக்கு மட்டுமே மாதம் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது என அவர் கூறியுள்ளார்.