நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். ரஜினி, அஜித், விஜய் தொடங்கி தற்போதுள்ள நடிகர்கள் வரை 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தான் நடிக்கும் படங்களில் சமூக கருத்துக்களை கூறி ‘சின்னக்கலைவானர்’ என பெயரெடுத்த விவேக், தொடர்ந்து சமூக சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். மேலும் பசுமை இந்தியாவை முன்னெடுக்கும் விதமாக கோடிக்கணக்கான மரங்களை விவேக் நட்டுள்ளார். இதுதொடர்பான விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை சினிமா படிப்பில் ஈடிபட்டுக் கொண்டிருந்த நடிகர் விவேக்கிற்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனை அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக் விரைவில் உடல் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நேற்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
மற்ற செய்திகள்