RRR Others USA

அந்த கல்லூரி பசங்க போட்ட உயிர் பிச்சையில் வாழ விரும்புல... ஆடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கல்லூரி மாணவர் ஒருவரை புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் வேறு கல்லூரி மாணவர்கள் கேலி, கிண்டல் செய்தார்கள் என அதே இடத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அந்த கல்லூரி பசங்க போட்ட உயிர் பிச்சையில் வாழ விரும்புல... ஆடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவர்!

அரக்கோணம் குருவராஜப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார். மாநிலக் கல்லூரியில் முதுகலை வரலாறு பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்று வகுப்புகளை முடித்த குமார் பிற்பகல் வீடு திரும்ப புறநகர் ரயிலில் ஏறியுள்ளார். குமார் உடன் அவர் நண்பர் நவீன் என்பவரும் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திருநின்றவூர் அருகே ரயில் நின்ற போது வேறு கல்லூரி மாணவர்கள் சிலர் குமார் மற்றும் நவீனை வழிமறித்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. நடைமேடையில் இந்தப் பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போது ரயில் கிளம்ப நவீன் என்ற மாணவன் தப்பித்து ரயிலில் ஏறியுள்ளார். ஆனால், குமார் அந்த வேறு கல்லூரி மாணவர்கள் மத்தியில் இருந்துள்ளார்.

குமாரை அவர்கள் அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த மாணவர்கள் குமாரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் எனத் தெரிகிறது. அதன் பின்னர் குமார் தனது செல்போனில் தனது நண்பர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ‘அந்தக் கல்லூரி பசங்க கொடுத்த உயிர் பிச்சையில் என்னால் வாழ முடியாது. என்னை யாரும் தப்பா நினைக்க வேண்டாம் மச்சான்.

அம்மா, அப்பா என்னை தப்பா நினைக்காதிங்க. நான் செத்துடறேன், யாருமே என்னை தப்பா நினைக்காதிங்க. என் குடும்பத்துக்கு சொல்லிகிறேன்’ எனப் பதிவு செய்த ஆடியோவை அனைவருக்கும் அனுப்பிவிட்டு ரயில் முன் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆசியோவில் வேறு சில மாணவர்களின் குரலும் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இறந்த மாணவனின் உடலை திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து மறைந்த மாணவனின் கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் பலர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் முன் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் போலீஸார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

SUICIDEATTEMPT, கல்லூரி மாணவர் தற்கொலை, மாணவர் தற்கொலை, RAGGING, COLLEGE STUDENT SUICIDE, THIRUVALLUR

மற்ற செய்திகள்