‘இவங்களுக்கு மட்டும்’... ‘டிசம்பர் 2-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்’... ‘தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2-ல் கல்லூரி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆன்லைனிலேயே வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி வரும் நவம்பர் 16 தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம், தமிழக அரசு கருத்து கேட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பள்ளிகளை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீபாவளி தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்