‘எங்க போனாலும் இதையே சொல்றாங்க!.. ஆண்மகன் என சான்றிதழ் கொடுங்க!’.. ஐடி வேலையை இழந்த வாலிபர் கலெக்டருக்கு மனு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னை ஒரு ஆண் மகன் என அறிவித்து சான்றிதழ் தருமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் மனு அளித்துள்ளார்.

‘எங்க போனாலும் இதையே சொல்றாங்க!.. ஆண்மகன் என சான்றிதழ் கொடுங்க!’.. ஐடி வேலையை இழந்த வாலிபர் கலெக்டருக்கு மனு!

43 வயதான ஸ்டாலின் சிங் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியில் பெற்றோர், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். எம்சிஏ படித்த இவர் 2013இல் திருவனந்தபுரத்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தபோது உடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் சிலர் இவரை திருநங்கை எனக்கூறி பரிகாசம் செய்து பேச இந்த தகவல் பரவியதை அடுத்து வேறு எங்கும் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் ஸ்டாலின் சிங், தன் பணியில் இருந்து விலக செய்திருக்கிறார்.

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் ஸ்டாலின் சிங், “அப்போது எனக்கு அதுபற்றி சரியாக தெரியவில்லை. நான் ஒரு ஆண்மகன் ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் அனைத்திலும் அப்படியே இருக்க, நான் இப்போது நான் எங்கு வேலை சென்றாலும் திருநங்கை என்று கூறி வருகிறார்கள்.

இதனால் மன உளைச்சலால் பெரிதும் மனவேதனை அடைந்து மன உளைச்சலுக்கு மருந்து எடுத்து வருகிறேன். ஆகவே அவ்வாறு அவதூறாக பேசுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கி, நான் ஒரு ஆண்மகன் என்று ஒரு சான்றிதழ் தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்