'மனச திடப்படுத்திகோங்க, உங்க மனைவி உங்கள விட்டு போய்ட்டாங்க...' 'கேட்ட அடுத்த செகண்ட்லயே...' - நெகிழ வைத்த தூய்மையான காதல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் தன் மனைவி இறந்த செய்தி கேட்டு, கணவரும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி என்னதான் திருமணத்தை ஒரு பாரமாக சொல்லிக்கொண்டு வந்தாலும் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒருவர் பிரியும் நேரத்தில் மற்றொருவருக்கு ஏற்படும் வலி உலகத்தில் யாராலும் ஈடு செய்ய இயலாது. இந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் தான், கோவை மாவட்டம் சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பகுதியில் வசித்து வருபவர் 74 வயதான மணி மற்றும் 72 வயதான அவரது மனைவி சரோஜினி.
நமக்கு அவர்கள் வயதான முதியவர்கள் என்றாலும் அத்தம்பதிகளுக்கும் திருமணம் ஆனது முதல் அன்பு குறையாமல் ஒரு காதல் பறவைகளாகவே வலம் வந்துள்ளனர்.
இதில் துர்திஷ்டவசமாக மூதாட்டி சரோஜினி அவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன் உடல்நிலையில் மந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் உடல்நிலை சரில்லாத தன் மனைவியை மருத்துவமனையில் வைக்காமல் தன் கண்ணெதிரிலேயே கவனித்து வந்தார் முதியவர் மணி.
விதி வலியது என்னும் பழமொழிக்கேற்ப நேற்று இரவு சரோஜினியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததுள்ளது. சுதாரித்துக்கொண்ட முதியவர் மணி, மனைவி சரோஜினியை மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் மனைவி உயிரிழந்ததை அறிந்த முதியவர் மணி, அதிர்ச்சி தாங்காமல் வீட்டிலேயே மயங்கியுள்ளார்.
பின்னர் தம்பதிகளின் அக்கம்பக்கத்தினர் முதியவர் மணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் முதியவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வாழ்வின் பாதிவருடங்கள் சேர்ந்து வாழ்ந்த மனைவி தன்னை விட்டு பிரிவதை தாளாமல் மனைவியுடன் கணவனும் விண்ணுக்கு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்