'கொரோனா பரவுது... அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மாஸ்க் போடாம நிக்குறாங்க'!?.. தலைவர்கள் சிலைக்கு 'மாஸ்க்' அணிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை நஞ்சுண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் முகக் கவசம் அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முகக் கவசம் அணிந்து பொது இடங்களுக்கு வந்து செல்வதை காண முடிகிறது. இந்நிலையில், கோவை நஞ்சுண்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் முகக் கவசம் அணிவித்து சென்றுள்ளனர்.
இதனைப் பார்த்த அப்பகுதியை சார்ந்த எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா விசுவாசிகள் சிலையில் இருந்த முகக் கவசங்களை அகற்றினர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS