‘அம்மா பசிக்குது’.. நூடுல்ஸ் சமைக்க கேரட் எடுத்துச் சென்ற மகள்.. கோவை அருகே சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எலி மருந்து தடவி வைக்கப்பட்ட கேரட்டை சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அம்மா பசிக்குது’.. நூடுல்ஸ் சமைக்க கேரட் எடுத்துச் சென்ற மகள்.. கோவை அருகே சோகம்..!

மளிகைக்கடை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து (வயது 55). இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி கிரேஷி அம்மா (வயது 52). செங்குட்டைபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு எனிமா ஜாக்குலின் (வயது 19), பிராங்குலின் (வயது 16) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

சமையல்

இதில் மூத்த மகள் எனிமா ஜாக்குலின் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி வீட்டில் இருந்த எனிமா ஜாக்குலின், தனது தாயிடம் பசிக்குது எனக் கூறியுள்ளார். அதற்கு அவர், நுாடுல்ஸ் சமைத்து சாப்பிடுமாறு தெரிவித்துள்ளார்.

Coimbatore student dies after eating rat poisoned carrot

கேரட் சாப்பிட்டதும் மயக்கம்

இதனை அடுத்து மளிகைக் கடையில் இருந்த நூடுல்ஸ் பாக்கெட் மற்றும் சில கேரட்டுகளை எடுத்துச் சமைத்துள்ளார். அப்போது ஒரு கேரட்டை சாப்பிட்ட எனிமா ஜாக்குலினுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

எலி மருந்து

இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மளிகைக்கடையில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால், தாய் கிரேஷி கேரட்டில் எலி மருந்தை தடவி வைத்திருந்துள்ளார். இதை எனிமா ஜாக்குலின் தெரியாமல் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

COIMBATORE, GIRL, RATPOISON, CARROT

மற்ற செய்திகள்