‘பலமுறை’ சொல்லியும் கேட்காத பெற்றோர்... கோவையில் ‘7ஆம் வகுப்பு’ மாணவி செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் பெற்றோருக்கு இடையேயான தகராறால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பலமுறை’ சொல்லியும் கேட்காத பெற்றோர்... கோவையில் ‘7ஆம் வகுப்பு’ மாணவி செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...

கோவையைச் சேர்ந்த முத்துக்குமார் -  முல்லைக்கொடி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமாரின் குடிப்பழக்கத்தால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுடைய 7ஆம் வகுப்பு படிக்கும் மகள் பெற்றோரிடம் சண்டை வேண்டாமென பலமுறை கூறியும் அவர்கள் கேட்காமல் இருந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்திருந்த சிறுமி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிறுமி தற்கொலைக்கான  காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

SUICIDEATTEMPT, SCHOOLSTUDENT, COIMBATORE, FAMILY, GIRL