"Support பண்ண போய் கடைசில.." உணவு டெலிவரி ஊழியர் அளித்த பரபரப்பு பேட்டி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

"Support பண்ண போய் கடைசில.." உணவு டெலிவரி ஊழியர் அளித்த பரபரப்பு பேட்டி

Also Read | அடிக்கடி மிக்சி, மசாலாவுடன் EB ஆபிஸ் போகும் நபர்.. காரணத்தைக் கேட்டு வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

குடும்பத்தினருடன் சின்னியம்பாளையம் பகுதியில், ஸ்டேஷனரி கடை ஒன்றை மோகனசுந்தரம் நடத்தி வந்த நிலையில், கொரோனா தொற்று பேரிடரின் போது, அதிக வியாபாரம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனத்தில், ஊழியராகவும் மோகனசுந்தரம் பணிபுரிந்து வந்துள்ளார்.

பைக் மோதிய பள்ளி வேன்

இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், உணவகத்தில் இருந்து உணவு ஆர்டரை எடுத்துக் கொண்டு, புளியங்குளம் சாலையை நோக்கி மோகனசுந்தரம் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்குள்ள சிக்னல் ஒன்றில் வாகனங்கள் நிற்க, முன்னாள் நின்ற இரு சக்கர வாகனம் ஒன்றில், பள்ளி வேன் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.

அப்போது, இந்த விபத்து தொடர்பாக வேனை தடுத்து நிறுத்தி, ஓட்டுனரிடம் மோகனசுந்தரம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டதும், அப்பகுதியில் நின்ற போக்குவரத்து போலீஸ், சம்பவ இடத்திற்கு வந்து, விவரங்கள் எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல், மோகனசுந்தரத்தின் கன்னத்தில் அறைந்து அவரது செல்போன் மற்றும் பைக்கின் சாவியைக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

சிக்னல்'ல நின்னுட்டு இருந்தப்போ..

இதனைக் கண்டதும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போன நிலையில், வாகன ஓட்டிகள் எடுத்த வீடியோவும் பெரிய அளவில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மோகனசுந்தரம் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் பேசும் மோகனசுந்தரம், "வழக்கம் போல உணவை வாங்கி விட்டு டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்தேன். அப்போது நான் சிக்னலில் நின்று கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த பள்ளி வேன் ஒன்று, முன்பு நின்ற பைக்கின் பின்னால் இருந்த பெண் மீது லேசாக மோதியது. இதனால், பைக்கை ஓட்டிய நபரும் வேன் ஓட்டுனரிடம் முறையிட்டார்.

Coimbatore food delivery man about the incident near traffic signal

அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டேன்..

என் அருகே இருந்த யாரும் இது பற்றி கேட்காமல் இருந்ததால், நான் சென்று வேன் டிரைவரிடம் கேள்வி கேட்டேன். அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ், எதுவும் கேட்காமல் எனது கன்னத்தில் அறைந்தார். நான் பேச முயற்சி செய்த போதும், அவர் கேட்பதாக இல்லை. பின்னர், எனது ஹெட்போனை தூக்கி வீசி, மொபைல் போனுடன், பைக் சாவியையும் எடுத்துக் கொண்டு சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து, நான் அவர்களிடம் சென்று, எனது பைக் சாவியையும், மொபைல் போனும் கேட்டேன். அப்போதும், சில கேள்விகளை என்னிடம் போலீசார் கேட்டனர். இறுதியில், நான் தப்பு செய்திருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். பின்னர் தான் எனது மொபைல் போன் மற்றும் சாவி கிடைத்தது. தொடர்ந்து, உணவு டெலிவரி செய்ய நான் கிளம்பி விட்டேன்" என மோகனசுந்தரம் தனக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கி உள்ளார்.

Also Read | "ஒரு டிகிரி வாங்குறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே.." காலேஜ் பட்டம் பெற்ற பூனை??.. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.. பின்னணி என்ன??

தொடர்ந்து, மோகனசுந்தரத்தின் மனைவியும் தனது கணவருக்கு நேர்ந்த சம்பவம் குறித்து, சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பான முழு வீடியோவைக் காண:

COIMBATORE, FOOD DELIVERY MAN, TRAFFIC SIGNAL, உணவு டெலிவரி ஊழியர்

மற்ற செய்திகள்