"எங்களை அசிங்கப்படுத்துனதுக்கு வாழ்த்துக்கள்",,.. 'மாநகராட்சி'யை எதிர்த்து,, 'பேனர்' வைத்த 'குடும்பம்'... வைரலாகும் சம்பவம்... நடந்தது 'என்ன'???
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை ஹோப் காலேஜ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, குடும்பத்திலுள்ள மற்ற 5 நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறி, அந்த வீட்டின் முன்பு மாநகராட்சி சார்பில் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என பேனர் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உறுதியான நான்கு பேரும், மீண்டும் பரிசோதனை மேற்கொண்ட போது, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதனால் கோபமடைந்த அந்த குடும்பத்தினர், கோவை மாநகராட்சியை கண்டித்து வினோத முறையில் விளம்பரம் ஒன்றை வைத்துள்ளனர். இதில், 'கொரோனா தொற்று இல்லாத எனது குடும்பத்தினருக்கு தொற்று இருப்பதாக முத்திரை குத்தி என்னையும் எனது குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஒருவர்தெரிவிக்கையில், பொதுவாக கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு 4 - 5 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளும் போது கொரோனா இல்லை என வருவது இயல்பானது தான் என தெரிவித்தார். இருப்பினும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் எனவும் மருத்துவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்