'சீட்டில் அமர்ந்துகொண்டே மனுவை வாங்கிய ஆட்சியர்'!.. கடுப்பான அதிமுக எம்.எல்.ஏக்களால் முற்றிய வாக்குவாதம்!.. கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை அவமதித்ததாக கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சீட்டில் அமர்ந்துகொண்டே மனுவை வாங்கிய ஆட்சியர்'!.. கடுப்பான அதிமுக எம்.எல்.ஏக்களால் முற்றிய வாக்குவாதம்!.. கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது என்ன?

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மத்திய மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களை ரத்து செய்யக்கூடாது, தொகுதிகளில் நடைபெறும் அரசு பணி தொடக்க நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக கொறாடா எஸ்.பி வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு கொடுக்க வந்தனர்.

அப்போது, கலெக்டர் சமீரன் அமர்ந்தபடியே எம்.எல்.ஏ-க்களிடம் இருந்து மனு வாங்கியுள்ளார். இதற்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக, பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குறுக்கிட்டு, அவர்களை அமைதியாக இருக்கும்படி வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் கூறினர். ஆனாலும் ஜெயராமன், செல்வராஜ் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"என்ன இப்படி பண்றீங்க..? இது ரொம்ப தவறு சார்.. என்ன பழக்கம் இது..? நான் 25 வருஷமா மக்கள் பிரதிநிதியா இருக்கேன். இந்தப் பழக்கம் எல்லாம் ரொம்ப தவறுங்க.." என்று ஜெயராமன் கூறினார். அதேபோல செல்வராஜ், "இது என்ன புது பழக்கம்?" என்று கேட்டார். அதன் பிறகு ஆட்சியர் எழுந்து நின்று மனுவை பெற்றுக்கொண்டார்.

இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 

மற்ற செய்திகள்