'மொட்ட மாடியில ஒரே சத்தமா இருக்கேன்னு திரும்பி பார்த்தா...' 'தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரியர் மாணவர்கள்...' - முதல்வரை வரவேற்ற மாணவர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரியர் மாணவர்களின் வித்தியாசமான பதாகைகள் தமிழக முதல்வரை நகைப்புக்குள் ஆக்கியது.

'மொட்ட மாடியில ஒரே சத்தமா இருக்கேன்னு திரும்பி பார்த்தா...' 'தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரியர் மாணவர்கள்...' - முதல்வரை வரவேற்ற மாணவர்கள்...!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. மேலும் அரியர் வைத்த மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியது.

தேர்வு அச்சத்தில் இருந்த மாணவர்களையும், அரியர் மாணவர்களின் மனதை குளிர்விக்கும் பொருட்டு, கல்லூரி மாணவர்களின் அரியர்களை ஆல் பாஸ் என அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அந்நேரத்தில் நெட்டிசன்களும், கல்வியாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல மாணவர்கள் பிளாக்ஸ் பேனர் வைத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது சட்டமன்ற தேர்தலில் நடக்கும் காலகட்டத்தில் ஊர் ஊராக சுற்றும் முதல்வருக்கு பல இடங்களில் மாணவர்களிடம் வரவேற்பு பலமாக உள்ளது.

இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, திடீரென ஒரு கட்டடத்தில் மொட்டை மாடியில் பெரும் ஆரவாரத்துடன் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த இடத்தை நோக்கி பார்த்தபோது, அங்கே 15-க்கும் மேற்பட்டவர்கள் பச்சை வண்ணத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர்.

அந்த பதாகைகளில் 'எடப்பாடியார்' என்று மேல் வரிசையில் நின்ற மாணவர்கள் எழுதி வைத்திருந்தனர். அடுத்த வரிசையில் நின்ற இளைஞர்கள் 'அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கே' எனவும் எழுதியிருந்தனர். இதை பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாய் விட்டு சிரித்துள்ளார்.

மற்ற செய்திகள்