'மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசி போதாது'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்'... குவியும் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

'மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசி போதாது'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்'... குவியும் பாராட்டு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. மாநில அரசுகளும் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மே 1-தேதியில் இருந்து தடுப்பூசி வழங்கத் தயாராக இருந்தன.

CM Stalin deciding to go for Global tenders to procure vaccines itself

ஆனால் மத்திய அரசு போதுமான தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கவில்லை. ஒரு பக்கம் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தடுப்பூசியின் தேவை என்பது முக்கியமாக உள்ளது. மத்திய அரசு போதுமான தடுப்பூசி டோஸ்களை ஒதுக்காத காரணத்தினால் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு இரண்டு டோஸ் செலுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு 10 லட்சம் பேருக்குச் செலுத்த வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்குள் 20 லட்சம் டோஸ்கள் தேவை.

இதன் காரணமாக தற்போது முதல் டோஸ் செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது தமிழக அரசும் அதே முடிவை எடுத்துள்ளது.

CM Stalin deciding to go for Global tenders to procure vaccines itself

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''18 - 45 வயது வரை உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 13 லட்சம் #COVID19 தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. எனவே, தேவையான தடுப்பூசிகளை உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் இறக்குமதி செய்து குறுகிய காலத்திற்குள் அனைவருக்கும் செலுத்திடத் தமிழ்நாடு அரசு முடிவு எடுத்திருக்கிறது'' எனத் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிக்கான தேவையை முன்னரே அறிந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முடிவுக்குச் சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்