"எப்போவுமே காரமா தான் சாப்பிடுவீங்களானு கேட்டேன்".. நரிக்குறவ மக்கள் வீட்டில் சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் சொன்ன பதில்.. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆவடியை சேர்ந்த நரிக்குறவ மக்களின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டுக்கோழி விருந்து போட்டிருக்கிறார்கள் மக்கள்.
Also Read | குரான் வாசிச்ச அப்பறம் தான் தேரோட்டம்.. மத நல்லிணக்கத்திற்கு சாட்சி சொல்லும் பாரம்பரியம்..!
நரிக்குறவ மாணவர்கள்
ஆவடியை சேர்ந்த நரிக்குறவ இனத்தை சேர்ந்த மாணவிகளான திவ்யா, ப்ரியா, தர்ஷினி ஆகியோரை நம்முடைய Behindwoods குழு சமீபத்தில் சந்தித்தது. அப்போது அவர்களுடைய சிரமங்கள் குறித்து மாணவர்கள் பேசினர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாக பேசிய இந்த மாணவிகளின் வீடியோ இணைய தளங்களில் வைரலானது.
தங்களுடைய வாழ்வியல் சிரமங்கள் குறித்து நம் Behindwoods குழுவிடம் பேசிய ஆவடி இமாகுலேட் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஆர்.பிரியா, அம்பத்தூர் எபினேசர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் கே.திவ்யா, ஆவடி நசரத் அகாடமியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் எஸ்.எஸ். தர்ஷினி ஆகிய மாணவிகளை நேரில் வரவழைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
சாப்பாடு போடுவீர்களா
அதன்பிறகு வீடியோ காலில் மாணவிகளின் குடும்பத்தாருடன் முதல்வர் உரையாடினார். அப்போது தங்களது பகுதிக்கு வரும்படி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் முதல்வரிடத்தில் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின்," அடுத்த வாரம் கண்டிப்பாக வந்து உங்களை சந்திக்கிறேன். உங்களது வீட்டிற்கு வந்தால் சாப்பாடு போடுவீர்களா?" எனக் கேட்டார்.
இதனால் உற்சாகமடைந்த மக்கள்," வாருங்கள் உங்களுக்கு கறிசோறு போடுகிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
நேரில் வந்த ஸ்டாலின்
இந்நிலையில் ஆவடியில் நரிக்குறவ மக்கள் வசிக்கும் பகுதியில் உயர்மின் கோபுர விளக்குகள் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின், முன்பு கூறியதை நிறைவேற்றும் விதமாக அங்குள்ள மாணவிகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
திவ்யா என்ற மாணவியின் வீட்டிற்கு சென்ற முதல்வர் தேநீர் அருந்தினார். அதன்பிறகு, வீட்டில் நாட்டுக்கோழி குழம்பு வைத்திருப்பதாகவும் சாப்பிடவேண்டும் எனவும் திவ்யா கேட்க, அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் அங்கேயே சாப்பிட்டார்.
காரமா இருக்கு
இட்லி மற்றும் கறிக்குழம்பு சாப்பிட்ட முதல்வர்,"எப்போதும் காரமாகத்தான் சாப்பிடுவர்களா?" என அங்கிருந்தவர்களை கேட்க, "காரமாக சாப்பிட்டால் தான் சளி எதுவுமே வராது, கரோனா கூட வராது" என்றனர் அம்மக்கள். மேலும், "கறி நல்லா இருக்கு" எனவும் முதல் பாராட்டினார்.
இதனை அடுத்து நரிக்குறவ மக்கள் அளித்த பரிசுகளை ஸ்டாலின் வாங்கிக்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவிகளின் விருப்பப்படி அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் "நரிக்குறவ மக்களின் வீட்டில் உணவு அருந்தியபோது எப்போதும் காரமாகத்தான் சாப்பிடுவீர்களா? எனக்கேட்டேன். காரமாக சாப்பிடுவதால் தான் சளி, இருமல் வருவதில்லை என கூறினர்" என்றார்.
ஆவடியில் நடைபெற்ற உயர்மின் விளக்குகள் திறப்பு விழாவுக்கு சென்ற ஸ்டாலின் அங்கிருந்த நரிக்குறவ மக்களின் வீடுகளில் சாப்பிட்டது குறித்து பலரும் வைரலாக பேசிவருகின்றனர்.
மற்ற செய்திகள்