'மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு'... '50 சதவீதம் தள்ளுபடி'... முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

'மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு'... '50 சதவீதம் தள்ளுபடி'... முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுச் சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 -ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 கி.மீட்டர் வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு நாளை மறுநாள் திங்கள்கிழமை(பிப்.22) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கட்டண குறைப்பு தினசரி அலுவலகம் செல்வோருக்குப் பயனளிக்கும் என்பதால் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்