'யூஜிசி நடைமுறைப்படியே தேர்ச்சி'... 'அரியர் தேர்வு விவகாரம் குறித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரியர் தேர்வு விவகாரத்தில் யூஜிசி குழு நடைமுறைப்படியே மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டதென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

'யூஜிசி நடைமுறைப்படியே தேர்ச்சி'... 'அரியர் தேர்வு விவகாரம் குறித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!'...

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் இறுதியாண்டு தவிர்த்து மற்ற அனைத்து பருவ மாணவர்களுக்கும் அரியர் இருந்தாலும் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் அவர்களும் பாஸ் என அண்மையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "யுஜிசி நடைமுறையை பின்பற்றியே தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அரியர் தேர்ச்சி விவகாரத்தில் திட்டமிட்டே சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்