By Selvakumar | Aug 18, 2019 03:56 PM
next ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது குறித்து முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நேற்று ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதன்மூலம் பசும்பால் கொள்முதல் விலை 4 ரூபாய் ஆகவும், எருமைபால் கொள்முதல் விலை 6 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி, ‘பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உற்பத்தியாளர்களின் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். மேலும் மழையின் அளவைப் பொறுத்துதான் மேட்டூர் அணையின் நீர் திறப்பு உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
EDAPPADIKPALANISWAMI, AAVIN, MILK, PRICE, HIKE