‘அரசு வழங்கிய 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்’!.. பரப்புரையில் முதல்வர் பழனிசாமி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘அரசு வழங்கிய 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்’!.. பரப்புரையில் முதல்வர் பழனிசாமி..!

அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘அதிமுக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுகீடு காரணமாக அரசு பள்ளியில் படித்த 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் தஞ்சை மாவட்டத்தில் 58 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன’ என அவர் பேசினார்.

CM Palanisamy talks about 7.5% quota for govt school students

அதேபோல் புயல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியை குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

CM Palanisamy talks about 7.5% quota for govt school students

முன்னதாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதவராக முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். இன்று திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

மற்ற செய்திகள்