‘எந்த ஆரவாரமும் இல்லை’!.. தனியாக நடந்து வந்து எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆரவாரமில்லாமல் சாலையில் நடந்துவந்து முதல்வர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

‘எந்த ஆரவாரமும் இல்லை’!.. தனியாக நடந்து வந்து எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர்..!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.

CM Palanisamy filed his nomination in Edappadi constituency

இதனை அடுத்து கட்சிகள் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். மேலும், கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

CM Palanisamy filed his nomination in Edappadi constituency

இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதல்வர் பழனிசாமி இன்று (15.03.2021) தாக்கல் செய்தார். ஆரவாரம் இல்லாமல் தனியாளாக நடந்து வந்து தனது வேட்புமனுவை எடப்பாடி வட்டாட்சியரிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

கடந்த 1989, 1991, 1996, 2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7-வது முறையாக மீண்டும் எடப்பாடி தொகுதில் போட்டியிடுகிறார். இதில் 4 முறை அவர் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்