தந்தையின் புத்தக டைட்டிலில் மகன் உதயநிதி நடித்த படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வைரல் ஃபோட்டோஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திரையரங்கில் பார்த்தார்.

தந்தையின் புத்தக டைட்டிலில் மகன் உதயநிதி நடித்த படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வைரல் ஃபோட்டோஸ்..!

Also Read | “அம்மா எங்கே?”.. அண்ணன் கிட்ட தம்பி சொன்ன பதில்.. சென்னையில் நடந்த பரபரப்பு..!

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஆர்ட்டிக்கள் 15’  என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வரும் மே 20-ம் தேதி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

CM MK Stalin watched Nenjukku Neethi movie in theatre

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை திரையரங்கில் கண்டு ரசித்தார். அப்போது தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் பெயரை இந்த திரைப்படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CM MK STALIN, NENJUKKU NEETHI MOVIE, THEATRE, UDHAYANIDHI STALIN, நெஞ்சுக்கு நீதி, முதல்வர் மு.க.ஸ்டாலின்

மற்ற செய்திகள்