COBRA M Logo Top

1 ரூபாய்க்கு 3 வேளை உணவு.. ஏழை எளியவர்களுக்கு 15 வருஷமா சேவை செய்யும் தம்பதி.. முதலமைச்சரின் உருக்கமான பதிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோட்டில் ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு 3 வேளை உணவு அளித்துவரும் தம்பதியை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

1 ரூபாய்க்கு 3 வேளை உணவு.. ஏழை எளியவர்களுக்கு 15 வருஷமா சேவை செய்யும் தம்பதி.. முதலமைச்சரின் உருக்கமான பதிவு..!

Also Read | அறுவை சிகிச்சையை மறைத்த மணமகன்.. அதிர்ந்துபோன மணப்பெண்.. 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..!

பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பதை சங்க இலக்கியங்கள் துவங்கி சான்றோர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். அந்த வகையில் ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகே உணவகம் ஒன்றை நடத்திவரும் தம்பதி 1 ரூபாய்க்கு உணவை அளித்துவருகின்றனர். இன்று நேற்றல்ல கடந்த 15 ஆண்டுகளாக இந்த தம்பதியினர் இச்சேவையை செய்து வருகின்றனர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

ஏழை மக்களுக்கு

ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகமே உணவை வழங்கி வருகிறது. ஆனால், நோயாளிகளுடன் தங்கியிருக்கும் நபர்கள் வெளியில் தான் உணவு தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதற்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 150 ரூபாய் வரையில் செலவாகும். இது ஏழை மக்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும் என கருதி வெங்கட்ராமன் என்பவர் தனது உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு உணவை வழங்க முடிவெடுத்திருக்கிறார்.

CM MK Stalin praises couple who sell food for just 1 Rupees

3 வேளையும்

இதன்படி காலை மற்றும் மாலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும் 1 ரூபாய்க்கு வழங்க அவர் முடிவெடுத்திருக்கிறார். அதன்படி கடந்த 15 ஆண்டுகளாக அதேபோல செய்தும் வருகிறார். இதன்மூலம் ஒருநாளைக்கு சுமார் 50 பேருக்கு உணவளித்து வருகிறார் வெங்கட்ராமன். அதுமட்டும் அல்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு 20 சதவீத தள்ளுபடியில் உணவை வழங்கும் இவருக்கு துணையாக இருக்கிறார் இவரது மனைவி. இந்நிலையில், இதுபற்றி அறிந்த தமிழக முதல்வர் இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்து

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்;

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "என்ன களிமண் மாதிரி இருக்கு".. ஏர்போர்ட் குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பொருள்.. உருக்கி பார்த்தப்போ தான் விஷயமே தெரியவந்திருக்கு..!

MKSTALIN, DMK, CM MK STALIN, COUPLE, CM MK STALIN PRAISES COUPLE, FOOD, SELL, SELL FOOD FOR 1 RUPEES

மற்ற செய்திகள்