ஆஸ்கார் வென்ற The Elephant Whisperers ஆவணப்பட இயக்குநருக்கு ரூ.1 கோடி.. நேரில் கௌரவித்த தமிழக முதல்வர்.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், நடைபெற்ற 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தமிழ் ஆவண குறும்படம் The Elephant Whisperers ஆஸ்கார் விருது வென்றது. முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers' சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

ஆஸ்கார் வென்ற The Elephant Whisperers ஆவணப்பட இயக்குநருக்கு ரூ.1 கோடி.. நேரில் கௌரவித்த தமிழக முதல்வர்.

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | "யாருமே அதை பத்தி பேசுறது இல்ல"... ஷாக் கொடுத்த இரண்டாவது ODI.. ரோஹித் ஷர்மா Open Talk..   

தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்தும், அவர்களுக்கு யானையுடனான உறவு குறித்தும் உருக்கமாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருந்தார் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார் குனீத் மோங்கா. நெட்பிளிக்ஸ் ஆவணப்படமான இப்படம் 41 நிமிடங்கள் ஒளிபரப்பாகக் கூடியது.

இதில் பொம்மன் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள தெப்பாக்காட்டில் வனத்துறையினரின் கண்காணிப்பில் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் உள்ளார்.  எதிர்பாராத விதமாக தாய் யானை மின் விபத்தில் உயிரிழக்க, இத்தகைய ஆபத்தான சூழலில் எஞ்சியிருந்த குட்டி யானையான ரகுவை பொம்மன் வளர்க்க நேர்கிறது. பொம்மனும் அவருக்கு உதவியாக இருக்கும் பெள்ளியும் சேர்ந்து ரகுவை மீட்டெடுக்கும் அவர்களின் வாழ்வியல் இயற்கைக்கும் மனிதர்களுக்குமான உறவைச் சொல்லும் ஆவணக்குறும்படம் ஆகும்.

CM MK Stalin met The Elephant Whisperers Director Kartiki Gonsalves

Images are subject to © copyright to their respective owners.

இந்த ஆவணக்குறும்படத்துக்கான ஆஸ்கார் விருதுடன் பேசிய இப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், பழங்குடி மக்களையும் விலங்குகளையும் முன்னிலைப்படுத்திய தங்களது இந்த படத்தை அங்கீகரித்தமைக்காக அகாடமிக்கு நன்றி தெரிவித்ததுடன், நம் தாய் நாடான இந்தியாவுக்கு இவ்விருதை சமர்ப்பித்துள்ளார். 

CM MK Stalin met The Elephant Whisperers Director Kartiki Gonsalves

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி ஆகியோரை அழைத்து தலா 1 லட்சம் ரூபாய் அளித்து கௌரவப்படுத்திய தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணி புரிந்து வரும் 91 பணியாளர்ளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

CM MK Stalin met The Elephant Whisperers Director Kartiki Gonsalves

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தமிழகம் திரும்பிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.  இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் நீலகிரியில் பிறந்து, அங்கு கல்லூரி பயின்றவர், பிறகு ஒரு புகைப்பட பத்திரிகையாளராக தன் பயணத்தைத் தொடங்கியவர், காட்டு விலங்குகள் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கினார். அப்படி பொறுமை மற்றும் வேட்கையுடன் விலங்குகள் மற்றும் மனிதர்கள் நிலவும் நிலத்தின் எதார்த்த தருணங்களையே இப்படி படமாக்கியிருக்கிறார்.

Also Read | "என்னதான் பெரிய பிளேயரா இருந்தாலும்.. என் அம்மா இத பத்தி கேட்டுட்டே இருப்பாங்க".. 14 வருஷத்துக்கு அப்புறம் டிகிரி.. ஷகிப் அல் ஹசன் உருக்கம்..!

THE ELEPHANT WHISPERERS, KARTIKI GONSALVES, OSCARS 2023, OSCAR TAMIL FILM

மற்ற செய்திகள்