தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா..? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் மக்கள் அதிகளவில் வெளியே சுற்றி வந்ததால், தளர்வுகளற்ற ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் 14-ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதனால் சென்னை தலைமை செயலகத்தில், சுகாராத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையண்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் கூடுதலாக அளிப்பது? என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இன்னும் ஓரிரு நாட்களில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்