ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகரும், ஊடகவியலாளருமான ரங்கராஜ் பாண்டேயின் தந்தை நேற்றிரவு காலமானார்.
ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு எதிராக நீதிமன்றத்தில் இவர் செய்யும் வாதங்கள், நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த க/பெ. ரணசிங்கம் படத்தில் தமிழ் குமரன் எனும் கலெக்டர் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று, திங்கள் கிழமை (02.01.2023) இரவு 9:45 மணிக்கு காலமானார். இவரது இறுதிச் சடங்கு சென்னையில் உள்ள வீட்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம்சிங்ஹாசன் பாண்டே மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரங்கராஜ் பாண்டே வீட்டிற்கு சென்று அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து,"தனது தந்தையார் திரு. ரகுநாதாச்சார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே அவர்களை இழந்து வாடும் ஊடகவியலாளர் Rangaraj Pandey அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்." என பதிவிட்டுள்ளார்.
Also Read | "வினோத ஆசை".. 18 லட்சம் ரூபாய் செலவு செஞ்சு ஓநாய் போல மாறிய இளைஞர்.. வைரலாகும் காரணம்!!
மற்ற செய்திகள்