“ஏழை மாணவர்களின் நலன் கருதி..” .. ‘நீட் தேர்வு தொடர்பாக’- தமிழக முதல்வர் பிறப்பித்த ‘அதிரடி’ ஆணை! அமைச்சர் செங்கோட்டையனின் ‘கூடுதல்’ அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பினால் 2வது ஆண்டாக நீட் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஓராண்டுக்கு மட்டும் நீட் பயிற்சி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக சட்டசபையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், இந்த மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது. #NEETReservation pic.twitter.com/KIZGRlAxlo
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 29, 2020
சமூக நீதி காக்கவும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவும், அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்