'முதல்வரின் குரலுக்கு என்ன ஆச்சு?'... 'இப்படி முதல்வர் பேசி பார்த்தது இல்லையே'... 'நெகிழ்ந்துபோன மக்கள்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உயிரைக்கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்களுக்காகவும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது தனது 3ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள முதல்வர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகு ராஜை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், ''உயிரை கொடுத்தாவது அதிமுகவை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என, உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பதாகக் கூறிய முதல்வர், ஸ்டாலினுக்குச் சவால் விட்டார். அதன்படி அதிமுக கட்சி ஊழல் கட்சி எனச் சொல்லும் ஸ்டாலினுக்கு என்னுடன் விவாதிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார். நாங்களே இடத்தை தேர்வு செய்து மேடை அமைத்துத் தருகிறோம், ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.
அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் மக்களிடம் உங்கள் பொய்கள் எதுவும் எடுபடாது, குற்றச்சாட்டுகளில் உண்மை, பொய் ஏதுவென்று அறிந்து மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என அவர் கூறினார்இ தற்கிடையே முதல்வர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் முதல்வரின் குரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வரின் குரலே தற்போது மாறியுள்ளது. இருந்தபோதும் அதனைப் பொருட்படுத்தாது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பம்பரமாகச் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போதே தனது குரல் பாதிக்கப்பட்டது குறித்துப் பேசிய முதல்வர், எனது தொண்டை சரியில்லை எனக் கூறினார். ஏற்கனவே முதல்வரின் குரல் சரியில்லாத நிலையில், முதல்வரே அவ்வாறு கூறியது அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நாங்களே இடத்தை தேர்வு செய்து மேடை அமைக்கின்றோம். இருவரும் நேருக்கு நேர் விவாதிக்கலாம்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 26, 2021
அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் மக்களிடம் உங்கள் பொய்கள் சுக்குநூறாகும். குற்றச்சாட்டுகளில் உண்மை, பொய் எதுவென்று அறிந்து நீதிபதிகளான மக்களே முடிவு செய்யட்டும்
மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு pic.twitter.com/wkiIr1RTNo
மற்ற செய்திகள்