'ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் தமிழகம்'... 'எடுக்கப்படப்போகும் முக்கிய முடிவுகள்'... மருத்துவ நிபுணர் குழுவுடன் 30ம் தேதி முதல்வர் ஆலோசனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 30ம் தேதி மருத்துவக் குழுவுடன் நடக்கவிருக்கும் ஆலோசனை தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் தமிழகம்'... 'எடுக்கப்படப்போகும் முக்கிய முடிவுகள்'... மருத்துவ நிபுணர் குழுவுடன் 30ம் தேதி முதல்வர் ஆலோசனை!

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

நாளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர், நாளை மறுநாள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த இரண்டு கூட்டங்களிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பது குறித்து தமிழக மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

மற்ற செய்திகள்