“தைப்பொங்கல் திருநாளில் பேரன்போடு..” - பொதுமக்களுக்கு வாழ்த்து சொல்லி, பொங்கல் கொண்டாடிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை பரங்கிமலையில் காவல் துறையினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
அண்மையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகையை அதிமுக தலைமையிலான தமிழக அரசு வழங்குவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டு செயல்படுத்தினார்.
இதேபோல் முருகக் கடவுளை சிறப்பித்துக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இந்த வருடம் முதல் தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக இனிவரும் ஆண்டுகளில் அறிவிப்பதாகவும் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கக்கூடிய டேட்டா கார்டுகளையும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இதேபோல் தமிழக காவல்துறை, தீயணைப்பு, மீட்பு பணித்துறை, சிறை மற்றும் சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பணியில் வெளிப்படுத்தும் செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் 3,186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் திருநாளன்று பதக்கங்கள் வழங்கப் படுவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாரம்பரிய உடையில், புதுப்பானையில் வைக்கப்பட்ட பொங்கலை கிண்டியும், மாடுகளுக்கு தீவனம் கொடுத்தும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
நம் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திடவும், உலக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவிடவும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் நல்வாழ்த்துகளை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/k7RARYCQRk
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 14, 2021
அத்துடன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியாக, “நம் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திடவும், உலக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவிடவும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் நல்வாழ்த்துகளை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்