‘இந்திய அளவில் அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பெருமிதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய அளவில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக முதல்வர் பெருமையோடு தெரிவித்துள்ளார்.

‘இந்திய அளவில் அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

CM Edappadi Palanisamy election campaign in Dindigul

இந்த நிலையில் இன்று (24-03.2021) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘பொங்கல் பண்டிகையை, எளிய மக்களும் உற்சாகத்துடன் கொண்டாட பல்வேறு பொருட்களை அரசு இலவசமாக அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையின்போதும், கொரோனா காலத்திலும் அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, திமுக ஆட்சிக் காலத்தில் நிதி உதவி அளிக்கப்பட்டதா? திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை, எடுத்துதான் பழக்கம்’ என முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.

CM Edappadi Palanisamy election campaign in Dindigul

இதனைத் தொடர்ந்து  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘இந்திய அளவில் அமைதி பூங்காவாக திகழ்வது தமிழ்நாடு. நான் விவசாயியாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் பயிர்கள் செழித்து வளர்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மற்ற செய்திகள்