‘இதை நினைச்சு நீங்க பயப்பட தேவையில்லை’!.. ‘சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த விடமாட்டோம்’.. பரப்புரையில் முதல்வர் திட்டவட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையின மக்கள் பயப்படத் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘இதை நினைச்சு நீங்க பயப்பட தேவையில்லை’!.. ‘சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த விடமாட்டோம்’.. பரப்புரையில் முதல்வர் திட்டவட்டம்..!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று சென்னையில் ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர் ஆகிய தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

CM Edappadi Palanisamy election campaign in Chennai

இதனை அடுத்து துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து பேசிய அவர், தழிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், சிறுபான்மையின மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும், சிறுபான்மையின மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்த விடுமாட்டோம் என்றும் முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

CM Edappadi Palanisamy election campaign in Chennai

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பாதிப்பின்போது வெளிமாநிலத் தொழிலாளர்களை அரசு செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்ததை குறிப்பிட்டு பேசினார். மேலும் கொரோனா காலத்திலும், மழை, வெள்ளைத்தின் போதும் சென்னை மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

CM Edappadi Palanisamy election campaign in Chennai

இதனைத் தொடர்ந்து ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, போக்குவரத்து நெரிசலற்ற மாநகராக சென்னையை மாற்ற அதிமுக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.

மற்ற செய்திகள்