'யார் யாருக்கெல்லாம் 'இலவச வாஷிங் மெஷின்' கிடைக்கும்'?.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளதாகக் கூறிய முதலமைச்சர், இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் தயாரா என கேள்வி எழுப்பினார்.
அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீது எந்த ஒரு ஊழல் வழக்கும் தொடர முடியாது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மடியில் கனமில்லை என்பதால் தங்களுக்கு வழியில் பயமில்லை என்றார்.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டிய அவர், ஆண்டுக்கு 6 சிலிண்டர், சோலார் அடுப்பு, வாஷிங்மெஷின் உள்ளிட்டவை, அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும் என்றார். மேலும், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்தும், அதன் பின்னர் மானாமதுரையில் அந்த தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜனை ஆதரித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மற்ற செய்திகள்